பதிவு செய்த நாள்
14
ஜூன்
2022
04:06
திருப்போரூர்,-திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தில், 363ம் ஆண்டு குரு பூஜை விழா நடந்தது.திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மதுரையைச் சேர்ந்த மீனாட்சி பக்தரான சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்டது.மேலும், திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டில் வீர சைவ மடத்தை நிறுவி, பக்தர்களுக்கு விபூதி அளித்து, கந்தசுவாமியை பற்றி, 726 பாடல்களையும் பாடியுள்ளார்.வைகாசி விசாகம், பவுர்ணமி நாளில், மடத்தில் ஜோதி வடிவில் மறைந்ததாக கூறப்படுகிறது.வைகாசி விசாக நாளில், சிதம்பர சுவாமிகளின் குரு பூஜை விழா, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும்.அந்த வகையில் இந்தாண்டு, சுவாமிகளின் 363வது குரு பூஜை விழா, நேற்று முன்தினம் நடந்தது.விழாவில், சிதம்பர சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், தீப துாப ஆராதனைகளும் நடந்தன.மாலை, சிதம்பர சுவாமிகளின் உற்சவமூர்த்தி, கந்தசுவாமி கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சியுடன், மாடவீதி உலா நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல்அலுவலர், மேலாளர், பணியாளர்கள் செய்தனர்.