மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2022 05:06
பரமக்குடி: பரமக்குடி மஞ்சள்பட்டணம் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 17 அன்று நடக்கிறது. இதனையொட்டி நேற்று 9:15 முதல் கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணி தொடங்கி, வைகை ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வருதல், அனுக்கை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் ஆகி முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை, மாலை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், தொடர்ந்து நாளை காலை 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள், மகா பூர்ணாஹுதி நடக்கிறது. தொடர்ந்து 9:30 மணிக்கு மேல் சித்தி விநாயகர் கோயில் விமானங்களுக்கு மகா அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை மஞ்சள்பட்டணம் கிராம சபை மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.