திருமலையில் குவிந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2022 01:06
திருப்பதி:திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் தர்ம தரிசனத்துக்காகபக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்தனர். கோடை விடுமுறை முடிவடைந்த பின்னும் திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகைஅதிகரித்துள்ளது. தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் அவர்கள் திருமலைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
திருமலைக்கு செல்லும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் தங்கவைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 32 அறைகளும் நிறைந்து வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 10 மணி நேரம் தேவைப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 76 ஆயிரத்து 407 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். உண்டியல் மூலம் 4.38 கோடி ரூபாய் வருவாய்கிடைத்தது.