ஆறுமுகநேரி : ஆறுமுகநேரி புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 12ம் தேதி திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கொடிகளை ஏந்திய வண்ணம் கோயிலை சுற்றி வந்தனர். இதனைத் தொடர்ந்து கோயிலின் முன்பு கொடியேற்றுவிழா நடந்தது. பங்கு தந்தைகள் ரூபர்ட் அருள்வளன், இருதயராஜ் அடிகளார் ஆகியோர் கொடியேற்றினர். இதனைத் தொடர்ந்து மாலை ஆராதனை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு மாலை ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 11ம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புனித அன்னம்மாள் சொரூப சப்பர பவனி துவங்கும். அங்கிருந்து அன்னம்மாள் ஆலயம் வந்து சிறப்பு திருப்பலி நடைபெறும். பின்னர் மெயின் பஜார் வழியாக மடத்துவிளை புனித சவேரியார் ஆலயம் வந்தடைவார்கள். திருவிழா தினமான வரும் 12ம் தேதி திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறும். ஏற்பாடுகளை பங்கு தந்தை, ஊர் தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.