* வெற்றி வேண்டுமா.. பயத்தை துாக்கி எறி. * ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் சுயநலம் இருக்கும். இந்த உண்மை கசக்கும். * குறிக்கோள் ஒன்றை எடுத்துக்கொள். அதை அடையும்வரை ஓயாதே. * உனது செயல்களை வைத்துத்தான் உன் கவுரவம் உயரும். * நீ எவ்வளவு பலவீனம் உள்ளவனவனாக இருந்தாலும் அதை பிறரிடம் சொல்லாதே. * காற்று வீசும் திசையில் மலரின் வாசனை செல்லும். ஆனால் நீ செய்யும் தர்மமோ எல்லா திசையிலும் செல்லும். * உனது ரகசியத்தை வெளிப்படுத்தாதே. மீறினால் சுதந்திரத்தை இழப்பாய். * யாரிடமும் வீண்வாதம் செய்யாதே. * கல்வி கற்பதிலும், தர்மம் செய்வதிலும் ஒருநாளும் திருப்தி அடையாதே. * தண்ணீர் இருக்கும் இடத்தில் பறவை இருப்பதுபோல, ஆதாயம் உள்ள இடத்தில் உறவினர்கள் இருப்பார்கள். * ஒரு செயலில் இறங்கும்முன், உனக்கு என்ன கிடைக்கும் என்பதை யோசி. * உழைப்பால் வரும் பணமே மகிழ்ச்சி தரும். * ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறந்துவிடாதே. * புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள கூச்சப்படாதே. * நல்லவர்களுடன் பழகு. உன் வாழ்வு பிரகாசமாகும். * முயற்சி இருந்தால் முட்டாள்கூட அறிஞனாகலாம்.