Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சம்: ... காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா: சிறப்பு திருமஞ்சனம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மங்கல வாத்தியம் மேளம் இல்லாமல் நடக்கும் சிவனுக்கு நான்கு கால பூஜை: பக்தர்கள் வேதனை.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மங்கல வாத்தியம் மேளம் இல்லாமல் நடக்கும் சிவனுக்கு நான்கு கால பூஜை: பக்தர்கள் வேதனை.

பதிவு செய்த நாள்

14 அக்
2026
11:10

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால பூஜைகளும், மங்கல வாத்தியம் மற்றும் மேளம் இல்லாமல் நடந்து வருகிறது என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் ஆயிரம் ஆண்டு காலம் பழமையானது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் ராகு கேது பரிகார ஸ்தலமாக அதாவது கால சர்ப்ப தோஷ ஸ்தலமாகவும் விளங்குகின்றது. தென் காளஹஸ்தி என்றழைக்கப்படும் இந்த கோயிலில் தினமும் திருவனந்தல், கால சந்தி, சாயரட்சை, பள்ளியறை என நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் 4.30 முதல் 6 மணிக்குள், ராகு காலத்தில் நடைபெறும் ராகு கேது தோஷ நிவர்த்தி பூஜைகளில், வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர். இந்த பூஜைகளின் போது மங்கல வாத்தியம் மற்றும் ராஜ மேளம் இசைக்கப்பட வேண்டும். அவ்வாறு இசைக்கப்படுவது ஆகம விதியாகும். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக மங்கல வாத்தியம் மற்றும் ராஜ மேளம் இசைக்கப்படவில்லை. காரணம் அந்த பணியில் இருந்தவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அதன் பின் புதிய பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால் மங்கல வாத்தியம் மற்றும் ராஜ மேளம் இன்றி நான்கு கால பூஜைகளும், தோஷ நிவர்த்தி பூஜைகளும் நடந்து வருகிறது. ஆகம விதியை மீறி நடை பெறும் இந்த பூஜைகளை பற்றி பக்தர்கள் கவலையில் உள்ளனர். கோயிலின் செயல் அலுவலர் இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்த பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar