நவராத்திரி நான்காம் நாள், சதுர்த்தி விரதம்: விநாயகர், மகாலட்சுமியை வழிபட கடன் தொல்லை தீரும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 10:10
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பாண்டவர்கள் வனவாசத்தின் போது தங்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக ஒரு மரத்தில் வைத்து, துர்க்கை அம்மனை நோக்கி நவராத்திரி விரதம் இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. மகாலட்சுமிக்கு அட்சதை கோலம் இட்டு செந்தாமரை, ரோஜா மலர் சாற்றி வழிபட வேண்டும். இன்று அம்பிகையை மகாலட்சுமியாக சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் அலங்கரித்து, அவல் கேசரி, பால் பாயசம், பட்டாணி சுண்டல் படைக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற்றிட முடியும். செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நவராத்திரி நான்காம் நாளில் பூஜிக்க கடன் தொல்லை தீரும் இன்று கொலுவில் வீற்றிருக்கும் மகாலட்சுமியை வழிபடுவோம்.. எல்லா நன்மைகளும் பெறுவோம்..!