அய்யாபட்டி முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக காப்பு கட்டுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 06:06
கோபால்பட்டி,கோபால்பட்டி அருகே உள்ள அய்யாபட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்பு கட்டினர்.
விழாவையொட்டி கோம்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள அய்யாபட்டி, பெரிய கோம்பைபட்டி, பெருமாள்கோவில்பட்டி, சின்ன கோம்பைபட்டி, பாப்பாத்தி அம்மன் நகர், பாப்பம்பட்டி, கடுக்காய்பட்டி, சரளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களால் கோம்பைபட்டியில் புதிதாக முத்தாலம்மன் கோவில் கட்டுவதற்கு பாலாலயம் செய்யப்பட்டு, புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிசேக ஆராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காப்புகட்டி 15 நாள் விரதத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 13 மூன்று கால யாக பூஜைகள் உடன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமபொதுமக்கள் செய்துவருகின்றனர்.