பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
10:07
வசதியில்லாத சிறுவன் ஒருவன் படிப்பதற்காக, பகுதி நேரமாக பொருட்கள் விநியோகம் செய்யும் வேலையை பார்த்தான். இப்படி ஒருநாள் வேலை செய்து கொண்டிந்தபோது, பசி எடுத்தது. அவனிடம் பணம் இல்லை. இதனால் அருகில் இருந்த வீட்டில் ‘உணவு கிடைக்குமா’ என நினைத்து கதவை தட்ட, பெண் ஒருவர் கதவை திறந்தார்.
அவரிடம் தயங்கியபடியே, தண்ணீர் கேட்டான். அவரோ இவனது கண்ணில் தெரிந்த பசி மயக்கத்தை பார்த்து, ஒரு டம்ளரில் பால் கொண்டு வந்தார்.
அதை வாங்கிய சிறுவன், ‘‘பசியால் வாடுகிறேன் என்று நான் சொல்லாமலேயே உதவி செய்துள்ள உங்களுக்கு, நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்’’ என்று நெகிழ்ச்சி அடைந்தான்.
‘‘சாதாரண உதவிதானே இது’’ என சொன்னார் அந்தப்பெண்.
அவனும் விடைபெற்றான். ஆண்டுகள் ஓடியது. சிறுவன் டாக்டரானான்.
ஒருநாள் இவர் நேயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருவரின் ரிப்போர்ட்டை பார்த்ததும், அவர் இருக்கும் ரூமிற்கு ஓடினார். அந்த நோயாளி வேறு யாருமல்ல... இவருக்கு உதவிய அந்தப்பெண். ஆனாலும் இவர் தன்னை யார் என்பதை தெரிவிக்காமல், சிகிச்சை அளித்தார். பின் பில்லும், அதனுடன் ஒரு கடிதமும் வந்தது. இதை பார்த்த அந்தப்பெண் அதிர்ச்சியானார். அதில், ‘நீங்கள் கொடுத்த ஒரு டம்ளர் பால், இந்த பில்லை நேர் செய்துவிட்டது’ என எழுதியிருந்தது. தனக்கு சிகிச்சை அளித்தவரை கண்டு கொண்ட அந்தப்பெண், ஆனந்த கண்ணீர் வடித்தார்.
பார்த்தீர்களா.. பலன் கருதாமல் செய்த உதவிற்கு கிடைத்த அன்பு பரிசுதான் இது.