பயணிகளால் நிரம்பி வழிந்தது பஸ். அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் இடையே, ‘ஜன்னலைத் திறந்தால் ஒருவருக்கு மூச்சுத் திணறுவதாகவும், மற்றொருவருக்கோ ஜன்னலை மூடினாலே... மூச்சுத் திணறுவதாகவும்’ என விவாதம் நடந்தது. இதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் விழி பிதுங்கியது. கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், ‘முதலில் ஜன்னலை மூடுங்கள். ஒருவர் எழுந்துவிடுவார். பிறகு ஜன்னலை திறங்கள். மற்றொருவரும் எழுந்துவிடுவார். பிரச்னை தீர்ந்தது’ என கண்டக்டரிடம் சொன்னார். இதைக்கேட்டவுடன், ‘இந்த யோசனை எப்படி வந்தது’ எனக் கேட்டார் கண்டக்டர். அதற்கு அந்தப் பெரியவர், ‘இருவரின் கணவன் நான்தான்’ என சொன்னார். பார்த்தீர்களா... இதுபோல்தான் பலரும் சொத்துக்காக சண்டையிடுகின்றனர். எனவே இருப்பதை அனைவருக்கும் சமமாக பிரித்து கொடுக்கலாமே... பிரச்னையே வராது.