கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழியானது, எதிரிகளை உள்ளே நுழைய விடாமல் தடுக்கும். அதைப் போல தன் பக்தர்களைத் தீவினை நெருங்காமல் கோட்டையாக நிற்பதால் அம்பிகைக்கு ‘துர்கா’ என்று பெயர். சிவபெருமான் அசுரர்களை வதம் செய்த போது, அவரது கையில் சூலமாக நின்றதால் ‘சூலினி’ எனப் பெயர் பெற்றாள். முருகப்பெருமான் பத்மாசுரனை வதம் செய்தபோது சக்தி வேலாக நின்றவளும் அம்பிகையே. அசுரர்களை அழிக்கும் துர்கையே தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அபயக்கரம் நீட்டி பயத்தைப் போக்கி தைரியம் ஊட்டுகிறாள்.