தொண்டு என்பது பிறருக்கு நன்மை ஏற்படுமாறு ஒரு செயலை முழுமையாக செய்வது, மற்றொன்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் பிறருக்கு முடிந்த சிறிய உதவிகளை செய்வதாகும். உதாரணத்திற்கு வீ்ட்டிற்கு வந்த உறவினர் பசியுடன் இருக்கிறார் என தெரிந்தால் முதலில் அவர்களுக்கு உணவு தயாரித்து பரிமாறுபவர்கள். வயதானவர்கள், கண்தெரியாதவர்கள், முடமானவர்கள் சாலையை கடக்க முயலும் போது அவர்கள் தேவையறிந்து உதவி செய்பவர்கள். பக்கத்து வீட்டுக்காரர் கஷ்டத்தில் இருக்கும் போது நம்மாள் முடிந்த பண உதவி செய்வது போன்றவை யாவும் அர்ப்பணிப்பான செயலாகும். இது போன்ற செயல்களை நாம் தினசரி கடைப்பிடித்து வந்தோம் எனில் முழு நேரத்தொண்டில் நம்மை நாமே ஈடுபடுத்திக் கொள்வோம்.