பலசரக்கு பொருட்களை நகரத்திலிருந்து வாங்கி கிராமங்களில் விற்பனை செய்பவர் பாதுஷா. அவருக்கு பறவைகள் பேசும் மொழி தெரியும். ஒருநாள் வியாபாரத்தை முடித்துக்கொண்டு காட்டின் வழியே வந்தார். மிகுந்த களைப்பால் மரத்தடியில் அமர்ந்த அவருக்கு இரு பறவைகள் பேசியது காதில் விழுந்தது. நகர் புறங்களில் நல்லவர்களையே காணவில்லை என ஒரு பறவை மற்றொன்றிடம் கேட்டது. அதற்கு வீட்டின் மாடிகளில் நாம் சாப்பிடுவதற்கு சிறிது தானியங்கள்,தண்ணீரை யார் வைக்கின்றார்களே அவர்களே நல்லவர்கள் என பதில் கூறியது. இதனை கேட்ட பாதுஷாவிற்கு குரானில் உள்ள ‘‘ பிராணிகள் பசியோடு இருக்கச்செய்வது இறைவனை கோபமூட்டும் செயலாகும்’’ என்ற வாசகம் நினைவிற்கு வந்தது. தனது வீட்டுமாடியில் தானியமும், தண்ணீரும் வைக்க வேண்டும் என முடிவெடுத்து. நகரத்தை நோக்கி நகர்ந்தார் பாதுஷா.