அது ஒரு காலை பொழுது. மரத்தின் மீது இருந்த சேவல் கூவிக்கொண்டிருந்தது. இதைக் கேட்ட நரி ஒன்று அதை பிடிக்க தந்திரம் செய்தது. ‘நண்பா.. பறவை, விலங்குகள் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி யாரும் யாரையும் வேட்டையாடக் கூடாது. வா.. நாம் விளையாடுவோம்’ என அழைத்தது நரி. இதன் தந்திரத்தை அறியாத சேவல் இறங்க ஆரம்பித்தது. அப்போது துாரத்தில் வேட்டை நாய்கள் வருவதை பார்த்தது. ‘நண்பா.. நம்முடன் விளையாட இன்னும் சிலர் வருகிறார்கள்’ என சந்தோஷப்பட்டது சேவல். ‘என்ன உளறுகிறாய். தெளிவாக சொல்’ என கோபப்பட்டது நரி. ‘அங்கேப்பார் நண்பா’ என சேவல் சொல்வதற்குள் வேட்டை நாய்கள் அங்கு வந்தன. அவ்வளவுதான். நரி ஓட்டம் பிடித்தது. அதனுடைய தந்திரம் பலிக்கவில்லை. ‘உத்தமர்களை மோசப்படுத்தி பொல்லாத வழியிலே நடத்துகிறவன், தான் வெட்டின குழியில் தானே விழுவான்’ என சொல்கிறது பைபிள்.