ஆடி அம்மாவசையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2022 04:07
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஆடி அம்மாவைைய முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலுக்கு வடக்கே ஸ்ரீலதாராயணன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.இக்கோவிலில் நேற்று ஆடி அம்மாவசையை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர்க்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு வெண்னை காப்பு மற்றும் துளசி மாலை அணிவிக்கப்பட்டது. இதுபோல் காமராஜர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கோவில்பத்து கோதண்டராமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவிலில்களில் ஆடி அம்மாவசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கடல்கரையில் கைலாசநாதர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலத்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.