போடி: ஆடி வெள்ளியை முன்னிட்டு, போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முத்தங்கி சேவை அலங்காரத்தில் பத்மாவதிதாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி குலாலர் பாளையம் காளியம்மன் கோயில், போடி எஸ்.எஸ்.புரம் சேனைத்தலைவர் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்ட தங்கமுத்து மாரியம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன், தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. பெண்கள் எலுமிச்சம் பழம் தீபமிட்டு வழிபட்டனர்.