சிவகாசி: ஆடி அமாவாசையை முன்னிட்டு சிவகாசியிலுள்ள கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சிவகாசி சிவன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. சிவகாசி முருகன், பத்ரகாளியம்மன், மாரியம்மன், துர்க்கை பரமேஸ்வரி அம்மன், முனியப்ப சாமி துர்க்கை அம்மன், திருத்தங்கல் கருநெல்லி நாதர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.