அவிநாசி: அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சுந்தரரால் பாடல் பெற்ற தலமானதும், காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய சிறப்புமிக்க பழமையான திருத்தலம் ஆகும்.
இத்தகைய சிறப்புமிக்க போற்றுதலுக்குரிய தலமான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 14 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மேலும்,ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது சிவ ஆகம விதிகளில் ஒன்றாகும். இதனையடுத்து கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற வேண்டும்,அதற்கான திருப்பணிகள் விரைந்து துவங்கிட வேண்டும் எனவும்,கும்பாபிஷேகம் தடங்கள் ஏதுமின்றி நல்ல முறையில் நடத்தி முடித்திட வேண்டும் என்றும் ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சன்னதியில் நவசக்தி அர்ச்சனை நடைபெற்றது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் ஒன்றிணைந்து வேத மந்திரங்கள் மற்றும் சகசர நாம அர்ச்சனை மற்றும் நவசக்தி அர்ச்சனை செய்தனர். இப்பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.