காளஹஸ்தி கருமாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2022 07:08
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் கொன்டமிட்டா பகுதியில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் திருவிழாவையொட்டி கோயில் சார்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக கோயிலை சிறப்பு மலர்களாலும் மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.அம்மனை காலை முதல் மாலை வரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டனர் .அதிகாலை முதலே பக்தர்கள் கருமாரி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் கூழ் ஊற்றியும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்திக் கொண்டனர். ஸ்ரீ காளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. மகளும் ரேணிகுண்டா மண்டல ஒய். எஸ் .ஆர். காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான பவித்ரா ரெட்டி உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.