பதிவு செய்த நாள்
03
ஆக
2022
07:08
ஆடிப்பெருக்கில் காவிரி பெருக்கெடுத்து ஓடும். அப்போது ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்து செல்லப்பட்டு தூய்மை பெறும்மனதிலுள்ள தீய எண்ணங்களை பக்தி என்னும் வெள்ளத்தை பாய்ச்சி அகற்ற வேண்டும் என்பதை ஆடிப்பெருக்கு உணர்த்துகிறது.
*திருச்சி , தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு பகுதிகளில் மக்கள் ஆற்றில் புனித நீராடுவர். ரங்கநாதர் , விநாயகர், அத்தியர், போன்றவர்களேடு சமபந்தம் கொண்ட காவிரிநதியில் நீராடினால் சுமங்கலி பாக்கியம் உண்டாகும். புதுமணத்தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற புதிய மஞ்சள் கயிறு மாற்றுவர். விவசாயிகள் விளைச்சல் பெருக வழிபாடு நடத்துவர்.
* தங்க நகைகள் வாங்க ஏற்ற சுபநாள் இன்று. வீட்டுக்குத்தேவையான எல்லா பொருட்களும் வாங்கலாம். செய்த நற்செயல் புண்ணியம் பெருகுவது போல இந்நாளில் செய்யும் சேமிப்பும் பன்மடங்கு பெருகும். தொழில் துவங்கினால் லாபம் பெருகும்.
* வளம் பெருக செய்யும் இந்நாளில் மகாலெட்சுமியை வழிபடுவது சிறப்பு, பால் தேன், தானியம், சர்க்கரை பொங்கல் படைத்து பூஜை செய்ய ப மனம் குளிர்ந்து அருள்வாள், பாலை குழந்தைகளுக்கும்,தேனைப் பெண்களுக்கும் , தானியத்தை பறவைகளுக்கும், பொங்களை ஏழைகளுக்கும் தானம் அளிக்க வேண்டும். மாலையில் விளக்கேற்றும் முன் வாசலில் மாக்கோலம் இட வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.