ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் மாலை மாற்றுதல் : இன்று திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2022 07:08
ராமேஸ்வரம்: ஆடித்தபசு யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று கோயிலில் ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 23ல் கொடி ஏற்றத்துடன் ஆடித்திருக்கல்யாணம் விழா துவங்கியது. 11ம் நாள் விழாவான ஆடித்தபசு யொட்டி, காலை 7 மற்றும் 9 மணிக்கு கோயிலில் இருந்து வெள்ளி கமல வாகனத்தில் பர்வதவர்த்தினி அம்மன், தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி தபசு மண்டபத்தில் எழுந்தருளினர். பின் மதியம் 2 :30 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின் மாலை 5 30 க்கு சுவாமி அம்மன் கோயிலுக்கு சென்றனர். இரவு 7:30 மணிக்கு அனுமார் சன்னதியில் நிச்சயதார்த்தம் நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மன் தங்க பல்லக்கில் தபசு மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று ( ஆக., 3 ) இரவு 8:30 மணிக்குள் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் விழா நடக்க உள்ளது.