தேரழுந்தூர் ஆமருவியப்பன் காவிரி படித்துறையில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2022 04:08
மயிலாடுதுறை: தேரழுந்தூர் ஆமருவியப்பன் காவிரியில் எழுந்தருள தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூர் கிராமத்தில் ஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோவிலில் திருமங்கையாழ்வார் 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இத்தகைய சிறப்புமிக்க கோவில் இருந்து ஆண்டு தோறும் ஆடி 18ம் தேதி பெருமாள் புறப்பட்டு மல்லியம் ராயர் அக்ரஹாரம் காவிரிப்படுகையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு ஆடி 18ம் தேதியான இன்று தேரழுந்தூர் கோவிலிலிருந்து ஆமருவியப்பன் பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு மல்லியம் ராயர் அக்ரஹாரம் காவிரி படித்துறையில் எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து காவிரியில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவேரியில் நீராடி பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கோவிலுக்கு சென்று அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.