கடலாடி: கடலாடி அருகே ஆப்பனூரில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற அரியநாச்சி அம்மன் கோயில் உள்ளது. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. 48வது நாள் மண்டலாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு மூலவர் அரியநாச்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஹோம வேள்வி, யாகசாலை பூஜையில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகநாதகுருக்கள், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.