அருப்புக்கோட்டை காளியம்மாள், கூட்டு அய்யனார் கோயில்களில் ஆடி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 04:08
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே ஆ.கல்லுப்பட்டியில், சித்தி விநாயகர், காளியம்மாள், கூட்டு அய்யனார் கோயில்களில், ஆடி பொங்கல் விழா 2 நாட்கள் நடந்தது. காலையில் சித்தி விநாயகர் கோயிலின் முன்பும், மதியம் காளியம்மன் கோவில் முன்பும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலையில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், இரவு முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு கூட்டு அய்யனார் கோயிலில், பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.