காளஹஸ்தி சிவன் கோயிலில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2022 08:08
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ காளஹஸ்தி எம்.எல்.ஏ.மதுசூதன்ரெட்டி தலைமையில் கோயில் நிர்வாக அலுவலக மேல் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கொடி மரத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து இனிப்புகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக. சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கினர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக அனைவரும் தேசிய கொடி ஏந்தி கொண்டு அனைவரும் கோயில் நுழைவாயிலில் உள்ள பிக்க்ஷால கோபுரம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாரத மாதாவின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.