ராகலாபுரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறுதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2022 08:08
சாணார்பட்டி, சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள ராகலாபுரம் காளியம்மன், பகவதிஅம்மன், முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கடந்த ஜூலை 29ஆம் தேதி சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மூங்கில் ஊன்றி தோரணம் கட்டுதல், ஆகஸ்ட் 13 காளியம்மன் ,பகவதி அம்மன் சுவாமி நகைப்பெட்டிகள் அழைத்து வந்து சந்தானவர்தினி ஆற்றங்கரையில் சுவாமி அலங்காரம் செய்தல், பின் சாமி மேல தாளங்களுடன் அழைத்து வருதல் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்தல் ,மாவிளக்கு எடுத்தல், அக்னி சிற்பி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கிடன்கள் பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். ஆகஸ்ட் 14 அம்மன் கங்கை சென்றடைதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக சுமார் 60 அடி உயரமுள்ள மரத்தில் எண்ணெய்களை ஊற்றி நடப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு கழுகு மரம் ஏறி, உச்சியில் உள்ள முடிப்பை அவிழ்த்து வந்தனர். விழாவின் நிறைவாக இன்று அம்மன் பூஞ்சோலை சென்றடைதல் நிகழ்ச்சி நடைபெறும்.