1962 பிப்ரவரியில் தை மாதம் 21, 22, 23 - தினங்களில் ராகுவைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் மகர ராசியில் கூடின. இம்மாதிரியான கிரக அமைப்பு உலகத்திற்கு கேடு விளைவிக்கும். அன்று வாழ்ந்த மக்கள் பயத்துடன் அந்த நாட்களை எதிர் நோக்கியிருந்தனர். இதையெல்லாம் காஞ்சிமஹாபெரியவர் உணர்ந்து பக்தர்களுக்கு பேருபகாரம் செய்ய நினைத்தார். சிஷ்யர்களை அழைத்து பல்வேறு வகையான ஹோமங்களை கோயில்களில் நடத்திட அறிவுறுத்தினார். அடியார்கள் அனைவரும் ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை பாடுங்கள்! தீவினை ஒன்றும் நடக்காது என உத்தரவு தந்து ஆசியும் வழங்கினார். கோயில்கள், சங்கீத சபாக்கள், தனியார் நிறுவனங்களிலும் ஓதுவார்களை கொண்டு கோளறு பதிகத்தை பாடச்செய்தார். செல்வந்தர்கள் மூலம் பதிகம் அச்சிட்டு வினியோகிக்க செய்தார். கோளறு பதிக இசைத்தட்டுக்கள் கோயில்களில் முழங்கின. பயம் கொண்ட நாட்களை மக்களும் அமைதியுடன் கடந்து சென்றனர் என்பதை இப்போதும் பக்தர்கள் பேசுவார்கள். தற்போது ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ள இறுக்கமான சூழலை தவிர்க்க தினந்தோறும் கோளறு பதிகம் படியுங்கள். குறைவில்லாமல் வாழுங்கள்