பதிவு செய்த நாள்
16
ஆக
2022
06:08
எண்ணுாறு ஆண்டுகளுக்கு முந்தையது. கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலா கோயில். இங்கு தர்மதேவதைக்கு தனிக்கோயில் உள்ளது. வாங்க தரிசிப்போம். புண்ணியத்தை பெறுவோம்.
முன்னொரு காலத்தில் கிராமமாக இருந்த இப்பகுதியில் வசித்த பரமண்ண ஹெக்டே என்பவர் வசித்து வந்தனர். அவரின் பக்தியை கண்ட தர்ம தேவதை மகிழ்ந்து இங்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள் என வரம் அளித்தனர். அதன்படி காசியில் இருந்து லிங்கமும், குமரி முனையில் இருந்து அம்மனையும் பிரதிஷ்டை செய்தனர் .
அவரின் வழிவழியே வந்தவர்கள் இன்றும் இத்தெய்வீகப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதீனங்களின் முகப்பு போல் காட்சி அளிக்கும் தர்ம ஸ்தலாகோயிலின் கருவறையில் மஞ்சுநாத சுவாமி காட்சியளிக்கிறார். இவருக்கு இருபுறமும் உற்சவர்களை தரிசனம் செய்யலாம். சுவாமி சன்னதிக்கு வடபுறத்தில் தர்மதேவதையின் சன்னதி தனியாக உள்ளது. கன்னியாகுமரி அம்மன், குமாரசுவாமி, ராகு முதலிய தேவதைகளும், அம்பாளின் உற்சவ விக்ரகம் உள்ளது. மஞ்சுநாதரின் கருவறைக்குப் பின் சுவரில் லிங்கோத்பவர், கணபதி சன்னதி உள்ளன .இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடக்கும் லட்சதீபம் விழா பிரபலமானது. மனநலம் பாதிப்பு, பில்லி, சூனியம், பேய்-பிசாசு பிடித்தவர்கள், பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், பாகப்பிரிவினை, நிலத்தகராறு, போன்ற பிரச்னையில் உள்ளவர்கள் மஞ்சுநாதரிடம் பிரார்த்தனை செய்து பலன் அடைகின்றனர்.
இக்கோயிலுக்கு எதிரே நந்தவனம், தீர்த்தகுளம், அன்னப்பசுவாமி கோயிலும் உள்ளது. இத்தலத்தின் சார்பாக கல்விக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, முதியோர் இல்லம் இயங்குகின்றன. ஏழைகளுக்கு திருமணம் இலவசமாக நடத்தப்படுகிறது. இக்கோயிலில் தினந்தோறும் நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்கின்றனர். இக்கோயிலுக்கு அருகே 1973 –ம்ஆண்டு ஒரே கல்லில் செய்யப்பெற்ற 39அடியும், 175டன் எடையுடைய பெரிய பாகுபலி சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்படி செல்வது மங்களூரிலிருந்து 75 கி.மீ.,