பதிவு செய்த நாள்
29
ஆக
2022
10:08
விநாயகர் வழிபாடு மிக எளிமையானது. மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், திருநீறு, சர்க்கரை, வெல்லம் என ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். அரைத்த பச்சரிசி மாவைக் கையால் பிடித்து வைத்து கூட வழிபடலாம். இதனை ‘பிடித்து வைச்சா பிள்ளையார்’ என வேடிக்கையாக சொல்வர். என்பர். கும்பம், ஹோமாக்னியில் விநாயகரை ஆவாஹனம் செய்தும் வழிபடுவதுண்டு.