திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய திருநாட்களான 21ம் தேதி குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 23ம் தேதி மாலையில் சுவாமி சண்முகர் சிவப்பு நிற பட்டு உடுத்தி சிவன் அம்சமாகவும், 24ம் தே தி அதிகாலையில் சுவாமி வெண்பட்டு அணிந்து பிரம்மாஅம்சமாகவும், அன்று பகல் 10.30 மணிக்கு மேல் பச்சை நிற பட்டு உடுத்தி பெருமாள் அம்சமாகவும் காட்சி அளிக்கிறார். 26ம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.