உமையநாயகி அம்மன் கோயிலில் ஆவணி முதல் பார்வை நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2022 08:08
சாயல்குடி: சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் புராதன சிறப்பு பெற்ற உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் மேற்கூரை ஏதும் இன்றி, வெயிலிலும், மழையிலும் திருமேனி படும் வண்ணம் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று ஆவணி பிறப்பை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு முதல் பார்வை நிகழ்ச்சிக்காக நடை திறக்கப்பட்டது. மூலவர் அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகை அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பொதுவாக ஆடி மாதம் அம்மன் கோயில்களில் முளைப்பாரி, முளைக்கொட்டு உற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படும்.ஆனால் இங்குள்ள அம்மன் கோயிலில் உமையநாயகி அம்மன் ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடிவிட்டு மீண்டும் திரும்பி வருவதாக ஐதீகம். நேற்று ஆடி மாதம் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆவணி மாத சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.