சூலூர்: சூலூரில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடிக்கழிவை ஒட்டி, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சூலூர் நகரில் உள்ள, தேவர் சமுதாய மக்களின் குல தெய்வ கோவில்கள் பலவும் பழமையானவை. இவற்றில், ஆடி மாத கழிவை ஒட்டி, பொங்கல் விழா நடந்தது. 20 க்கும் மேற்பட்ட கோவில்களில், பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். திருச்சி ரோட்டில் உள்ள எழுவக்கரிய அம்மன், எம்.ஜி.ஆர்., நகர் காமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.