பதிவு செய்த நாள்
18
ஆக
2022
08:08
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி அருகே, மஹா நவசண்டி யாக விழா மற்றும் ருத்ரயாகம் நேற்று துவங்கியது.விவசாயிகள், வணிகர்கள், விவசாயம் சார்ந்த தொழில் துறைகள் மற்றும் அனைத்து மக்கள் வாழ்வு செழிக்கவும், மஹா நவசண்டி யாக விழா மற்றும் ருத்ர யாகம், பொள்ளாச்சி ரோடு கள்ளிப்பட்டி பிரிவு அருகே நடக்கிறது.இந்த யாகத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி, மகாலட்சுமி, சுதர்சன ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை, 4:30 மணிக்கு வாஸ்து சாந்தி, சுயம்வர பார்வதி ேஹாமம், கல்யாண சுப்ரமண்ய ேஹாமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி கலியமூர்த்தி, வாழ்வின் நெறிமுறைகள் குறித்து சொற்பொழிவாற்றினார்.இன்று காலை, 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, ருத்ர ஆவாஹனம், ருத்ர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், கோ பூஜை, ரிஷப பூஜை, மஹா தீபாராதனை பூஜைகள் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.தொடர்ந்து, நாளை 19ம் தேதி காலை, 8:00 மணிக்கு, 13 அத்யாய ேஹாமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ேஹாம பூஜை நடைபெறும் நாட்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.