சுற்றுசூழல் பாதிக்காத விநாயகர் சிலைகள் : ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2022 07:08
ராமேஸ்வரம்: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ராமேஸ்வரத்தில் கடலில் மாசுபடாத விநாயகர் சிலைகளை ஹிந்து முன்னணியினர் பூஜை செய்ய உள்ளனர்.
ஆக., 31ல் விநாயகர் சதுர்த்தி விழா யொட்டி ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினர் திட்டகுடி, இந்திராநகர், புதுரோடு, காட்டுபிள்ளையார் கோயில், ஏரகாடு உள்ளிட்ட 16 இடங்களில் 3 அடி முதல் 8 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்ய உள்ளனர். கிழங்கு மாவு, காகித கூழில் உள்ளிட்ட சில மூலப்பொருள்களால் பிரத்யோகமாக வடிவமைத்த 16 விநாயகர் சிலைகள் நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள ஹிந்து முன்னணியினர் அலுவலகத்திற்கு வந்தது. இச்சிலைகள் ஆக.31 காலை பிரதிஷ்டை செய்து பூஜை நடக்கும். செப்., 1ல் ஊர்வலமாக எடுத்து சென்று அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்படும். இச்சிலைகளால் மீன்களுக்கு பாதிப்பு இன்றி, கடலில் மாசு ஏற்படாது என ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி பொது செயலாளர் ராமமூர்த்தி தெரிவித்தார்.