திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கடந்த ஜூலை 30ம் தேதி சாகைவார்த்தலுடன் கொடியேற்றம் துவங்கியது. கடந்த 7ம் தேதி முதல் சுவாமி வீதியுலாவும், நேற்று காலை 4.30 மணிக்கு அம்மனுக்கு திருமஞ்சனமும் நடந்தது. காலை 6.15 மணிக்கு திருக்கல்யாணமும், காலை 9.30 மணிக்கு தேரோட்டமும் நடந்தது.