கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையம் மாரியம்மன் @காவில் தேர்திருவிழா நிறைவு நாளில் மஞ்சள் நீராட்டு நடந்தது.கச்சிராயபாளையம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள மாரியம்மனுக்கு நேற்று தேர்த்திரு விழா நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று அம்மன் வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. பல்லக்கு தேரில் மாரியம்மனும், ஆர்யமாலா, கருப்பழகியுடன் காத்தவராயனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் கிராம பொது நலக்குழு தலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் கருப்பன், இணை செயலாளர் ஜெயவேல், பேரூராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.