இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விருந்து மண்டபம் மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 03:08
சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் விருந்து மண்டபம் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர். சாத்துார் குமராட்டியா புரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று முடி காணிக்கை செலுத்தி விட்டு உறவினர்களுக்கு அங்கு கோயிலுக்கு சொந்தமான மாரி விருந்து மண்டபத்தில் உறவினர்களுக்கு கறி விருந்து அளித்தார். அப்போது உணவு அருந்தி கொண்டிருந்தவர்கள் மீது மேற்கூரை காங்கிரிட் பூச்சு இடிந்து விழுந்தது.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த பெருமாள் சாமி,33. பிரியங்கா , 27. மீனாட்சி, 45. ஆகியோர் காயமடைந்தனர். சாத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.