பதிவு செய்த நாள்
29
ஆக
2022
03:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில் உள்ள, சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம், அக்.30ம் தேதி நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் நடூரில் உள்ள சீதா ராமர் கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடியும் நிலையில் உள்ளதால், விழா குழுவினர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இவ்விழாவில் காஞ்சி காமக்கோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமி தலைமையில் , கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம், 29ம் தேதி மாலை, 3:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும், 5:00 மணியிலிருந்து, இரவு, 10:00 வரை வேத பாராயணம் பூர்ணாஹிதி உபசாரங்கள் சாற்று முறை, விமான கலச ஸ்தாபனம், மூலவர் ஸ்ரீராமர், சீதா தாயார், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் மற்றும் ராமானுஜர் ஆகிய சுவாமிகளின் விக்ரகங்கள் பிரதிஷ்டையும், அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹோமம் திவ்ய பிரபந்தம் வேத பாராயணம் அடுத்து, யாத்ரா தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை, 8:00 லிருந்து, 9:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து சாற்று முறையும், தீர்த்த பிரசாதமும் அன்னதானம் ஆகியவை வழங்கப்படுகிறது. 31ம் தேதி முதல் நந்தா விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிவாஷ்ரம் அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.