Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாகை நவநீத கிருஷ்ணசுவாமி கோவில் ... விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்; தேனி கோயில்களில் திரண்ட பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சதுர்த்தியில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2022
06:09

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த விநாயகர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில், கருவறை அமையப் பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். ஆண்டு தோறும் இங்கு சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகின்றன. சதுர்த்தி தினமான நேற்று, உப்பூர் மோர்பண்ணை கடலில் நீராடிய பக்தர்கள், காளை வாகனத்தில் வீதி உலா வந்த விநாயகருடன், ஊர்வலமாக சென்று, கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். ஆர்.எஸ்.மங்கலம் கூ.கூ.விநாயகர் கோவிலில், மிளகாய் நவதானிய சங்க வியாபாரிகள் சார்பில், சதுர்த்தி விழா நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மேலச்செங்குடி விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை மற்றும் கொண்டைக் கடலைகள் வழங்கப்பட்டன. வாணியக்குடி வீர விநாயகர் கோவிலில் நடைபெற்ற, விநாயகர் சதுர்த்தி விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar