காரியாபட்டி: காரியாபட்டி பி.புதுப்பட்டியில் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சுழி திருமேனிநாதர் கோயிலை சுற்றி 9 அஷ்டலிங்க கோயில்கள் உள்ளன. காரியாபட்டி, பி.புதுப்பட்டியில் மேல பெருங்காசி ஈஸ்வரர் என்ற கல்யாணசுந்தரேஷ்வரர் இப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்தார். காலப்போக்கில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆற்றங்கரையில் புதைந்து போனது. அஷ்டலிங்கம் கண்டெடுக்கப்பட்டு, புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாகனம், கோ பூஜை நடந்தது. கல்யாணசுந்தரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.