தெக்கலூர் சூரிய பாளையம் அப்பார் செங்காளி ராயர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2022 05:09
அவிநாசி: செங்காளி ராயர். காமாட்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ரும்பாபிஷேகம் வேரு விமரிசையாக நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியத்துக்குட்பட்ட தெக்கலூர் அடுத்த சூரிபாளையம் பகுதியில், சுற்று வட்டார 16 கிராமங்களில் வாழும் செம்பகுல மக்களின் குலதெய்வமான அப்பார் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, இரண்டாம் கால யாக பூஜையில் திரவிய ஹோமம், பூர்ணாகுதி லலிதா எஹஸ்ரநாமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனையடுத்து இன்று காலை நான்காம் கால பூஜை நடைபெற்று செங்காளி ராயர், கரிய காளியம்மன், சப்த கன்னிகள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர விமானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனையடுத்து. தசாவதாரம், மகா அபிஷேகம், தீபாரதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், பக்தர்களுக்கு கோவில் விழா கமிட்டினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 5000ம் மேற்பட்ட பக்தர்கள் கும்பாபிஷேக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.