பதிவு செய்த நாள்
11
செப்
2022
08:09
கோவை: கோவையில் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் போஸ்ட். எல்.ராமசாமி நகர் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஅகத்திய மகரிஷி,ஸ்ரீ கோமாதா, ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ நந்தி, ஸ்ரீ ஐஸ்வரேஸ்வரர் முதலாம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவில் நிர்வாகிகள்,எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன் நகர் நல குழு மற்றும் கோவில் பக்தர்கள் இணைந்து நடத்திய விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் தலைவர் இராதாமணி, செயல் தலைவர் ஹரிவரதராஜன் மற்றும் பொருளாளர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.
விழாவில் முன்னதாக,கோமாதா பூஜை மஹாகணபதி , ஐஸ்வர்யேஸ்வரர் , ஸ்ரீ அகத்திய மகரிஷி , ஸ்ரீ கோமாதா , ஸ்ரீ காமதேனு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தமிழ்முறைப்படி சிறப்பு ஹோமத்தை, செந்தமிழ் ஆகம செம்மல் பாம்பன் அடிமை பெரிய குளம் குமார குருக்கள் , மற்றும் ஆனந்தகோகுல் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தினர்..தொடர்ந்து மஹா கலசங்கள் புனிதநீர் அபிஷேகம் , அலங்கார பூஜைகள் , மஹா தீபாராதனை , பட்டீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினரின் சிவ அழைப்பு கைலாய மேளம் , சிவனடியார்களின் சிறப்பு சிவ பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து, திருவண்ணாமலை சித்த யோகி திரு. பழனி அவர்கள் தலைகீழ் செய்த யோகா, பரத நாட்டிய முத்திரைகள், ருத்ரதாண்டவம், தலைகீழாக இருந்தவாரே இட்லி சாப்பிட்டு பால் குடித்தது மிகவும் சிறப்பானதாகவும் செயற்கரிய அற்புத யோகா செயல்விளக்க நிகழ்ச்சியாக அமைந்தது.இவரது செயற்கரிய யோகா மற்றும் தியான கலையை பாராட்டி துணை ஆட்சியர் சுரேஷ் அவருக்கும் கலந்து கொண்ட சுமார் 45 சிவனடியார்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.மேலும் 108 அரிய மூலிகைகள் கண்காட்சி தனித்துவமாக இருந்தது. தமிழ் முறைப்படி யாக பூஜை, கைலாய மேளம், சிவனடியார்களை கவுரவித்தல் என ஸ்ரீ அகத்திய மகரிஷி பூஜை வெகு விமரிசையாகவும் தனித்துவமாகவும் முதலாம் ஆண்டு பூஜை கோவை பாரின் விநாயகர் கோவிலில் நடைபெற்றது.விழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை சார்பாக, மருத்துவர் கதிர்வேல் ஒருங்கிணைத்த அரிய வகை மூலிகைகள் கண்காட்சியை தெற்கு வட்டாட்சியர் சரண்யா,கோவில் நிர்வாக தலைவர் திருமதி இராதாமணி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.. .தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 8 வடிவ ராசி செடிகள் நடை வலம் உடல் நலம் மற்றும் ஆன்மீக பயன்கள் குறித்து சிறு உரை நிகழ்த்தப்பட்டது.. தொடர்ந்து ..மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு,கோளறு பதிகம், பகவத்கீதை,மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காக பூஜையில் வைக்கப்பட்ட ருத்திராட்சம்,கோவில் பூஜை விவரம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.