சென்னை திருப்பதி கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24செப் 2022 04:09
சென்னை: சென்னை, தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் புரட்டாசி சனியை முன்னிட்டு, பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சியளித்தார்.
சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும், பிரமாண்ட அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் விசாக ஸ்ரீ சாரதா பீடம் உத்தரபீடாதிபதி சுவாத்மானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். நிகழ்வில், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக ஆலோசனைக்குழு தலைவர் சேகர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.