இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் திறப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2022 04:09
சாத்துார்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு காணிக்கை பொருள்கள் கணக்கிடும் பணி நடந்தது. மதுரை துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) பொன் சாமிநாதன், கோயில் உதவி ஆணையாளர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள், அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் காணிக்கை பொருட்களை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் உண்டியவில் ரொக்கமாக ரூ 38,99,960ம், தங்கம், 136 கிராம், வெள்ளி 2498 கிராம் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரியவந்தது. உண்டியல் திறப்பை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.