பெ.நா.பாளையம்: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பாலமலை ரங்கநாத பெருமாள் கோயில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், பெரியநாயக்கன் பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், திருமலை நாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், சின்னதடாகம் பெருமாள் கோவில், ஜெங்கம்மநாயக்கன்பாளையம் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நாளை புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் பெருமாள், தாயார்களுடன் திருவீதி உலா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.