மேட்டுப்பாளையம்: ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழா நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி கொலு உற்சவம் விழா, நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வருகின்றனர். நேற்று சவுடேஸ்வரி அம்மன், சவுண்டம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.