ஈரோடு : தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கசாமி கோவிலில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தாளவாடி அருகே உள்ள திகினாரை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் மைசூர் தசரா திருவிழா தொடங்கும் நாளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் இறுதி நாளான இன்று ரங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து தேரில் உலா வந்த சுவாமி திகினாரை கிராமத்தில் உள்ள வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் கோவிலில் உள்ள ஊர் குட்டையில் தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பத்தில் ரங்கநாதர் சுவாமி மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இந்த திருவிழாவில் தமிழக கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.