சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2022 10:10
செஞ்சி: செஞ்சி பகுதி பெருமாள் கோவில்களில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரம் செய்தனர். இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாத வினியோகமும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உள்ள பத்மாவதி தாயார் சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், தங்க கவச அலங்காரம் செய்தனர். மகா தீபாரதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பென்னகர் மேல்தாங்கல் திருவத்திமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.