பரமக்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனி வர விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2022 10:10
பரமக்குடி: பரமக்குடி பெருமாள் கோயில்களில் புரட்டாசி கடைசி சனி வார விழா நடந்தது.
பரமக்குடி சுந்தர்ராஜன் பெருமாள் கோயிலில் மூலவர் பரமஸ்வாமி, வஜ்ராங்கி சேவையில் அருள்பாலித்தார். உற்சவர் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கருட வாகனத்தில் ராஜாங்க சேவையில் அருள் அளித்தார். தொடர்ந்து தாயார் சன்னதியில் தசாவதாரக் காட்சியாக பெருமாள் அவதாரங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலை 6:00 மணி தொடங்கி இரவு 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் வரதன், திருப்பதி சேவையில் அருள் பாலித்தார். உற்சவர் சயன திருக்கோலத்தில் பரமபதநாதனாக அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் இரவு வரை கோவிந்தா கோஷம் முழங்க வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயில் ராமர், சீதை திருக்கல்யாண திருக்கோலத்தில் அருள் பாலித்தனர்.
*பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் புனிதபுளி ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
*பரமக்குடி சுந்தர் நகர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
*பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்கார சேவையில் அருள் பாலித்தார்.