குற்றாலம், குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10ம்தேதி காலை வெள்ளி சப்பரத்தில் இலஞ்சி குமரன் பவனியும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏகசிம்மாசனத்தில் காட்சியும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நடந்தது. 12ம்தேதி பஞ்மூர்த்திகள் புறப்பாடு, 13ம்தேதி தேரோட்டம் து. 15ம் தேதி குற்றாலத்தில் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடந்தது. இந்நிலையில் நேற்று சித்திரசபையில் ராஜ மூர்த்திக்கு, அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடந்தது.நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், பா.ஜ., குத்தாலிங்கம், பிலவேந்திரன், ராமையா, ஆயான் நடராஜன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் வீரபாண்டியன், அன்னையாபாண்டியன், ஈஸ்வரன், அமல்ராஜ் மற்றும் சிவபூத கனநாத வாத்திய குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.